முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய மகளிரணியின் ஆதிக்கம் தொடருமா..? இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடக்கம்

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2025      விளையாட்டு
9-Ram-55

Source: provided

ராஜ்கோட்: இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கும் நிலையில், இந்திய மகளிரணியின் ஆதிக்கம் தொடருமா என்று ரசிகர்கள்  எதிர்பார்த்துள்ளனர்.

சுற்றுப்பயணம்... 

அயர்லாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஒருநாள் தொடர் இன்று (ஜனவரி 10) முதல் தொடங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ராஜ்கோட்டில் தொடங்குகிறது.

இந்தியா வலுவாக...

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வென்ற இந்திய அணி மிகுந்த வலுவாக உள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அணியை வழிநடத்திய நிலையில், அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வேகப் பந்துவீச்சாளர் ரேணுகா சிங்குக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஸ்மிருதி மந்தனா... 

இந்திய அணியை ஸ்மிருதி மந்தனா கேப்டனாக வழிநடத்தவுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பேட்டிங்கில் அசத்திய அவர், தற்போது அணியை கேப்டனாக வழிநடத்தவுள்ளார். அணியின் துணைக் கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இந்தியா ஆதிக்கம்...

இந்திய அணி அயர்லாந்துக்கு எதிராக இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அனைத்துப் போட்டிகளிலுமே இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின்போது, 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அயர்லாந்தை வீழ்த்தியது. அயர்லாந்துக்கு எதிரான இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து