முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரப்பிரதேசத்தில் பயங்கரம்: வீட்டில் இருந்து 5 பேர் சடலமாக மீட்பு

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

லக்னோ : உத்தரபிரதேசத்தில் ஒரு வீட்டில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் லிசாடி கேட் காவல் நிலைய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மொயின் என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். மொயின் அங்குள்ள பகுதியில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக மொயினை காணாததால் கவலையடைந்த அவரது சகோதரர் சலீம், நேற்று முன்தினம் தனது மனைவியுடன் மொயினின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

அங்கு அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவு வெளிப்பக்கமாக பூட்டியிருந்ததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மொயின், அவரது மனைவி அஸ்மா மற்றும் அவர்களது மூன்று மகள்களான அப்சா (8), அசிசா (4) மற்றும் அடிபா (1) ஆகியோரின் உடல்களை போலீசார் கண்டெடுத்தனர். மேலும் அவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடு பூட்டப்பட்ட விதம், குற்றத்தில் ஈடுபட்ட நபர் குடும்பத்திற்கு தெரிந்த ஒருவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இறந்தவர்களில் ஒருவரின் கால்கள் படுக்கை விரிப்பால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும், தடயவியல் குழு மற்றும் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து