முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு பவுன் தங்கம் விலை ரூ.59 ஆயிரத்தை கடந்தது

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      வர்த்தகம்
Gold 2024-04-06

சென்னை, தங்கம் விலை நேற்று (ஜன.16) மீண்டும் ஒரு பவுன் ரூ.59,000-ஐ கடந்தது. இது நகை வாங்கும் சாமானியர்கள் மற்றும் இல்லதரசிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது (அக்டோபர் மாதம்) அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர், தங்கம் விலை குறையத் தொடங்கியது. கடந்த டிச. 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.56,800-க்கு விற்பனையானது.

பின்னர் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி, சென்னையில் நேற்று (ஜன.16) தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,390-க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு பவுன் ரூ.59,120-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனையானது.

பண்டிகை காலம், டாலர் மதிப்பு உயர்வு, அமெரிக்க அதிபர் பதவியேற்பு நெருங்குவது போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடைசியாக கடந்த அக்டோபரில் தங்கம் விலை பவுன் ரூ.59,640-க்கு விற்பனையானதே உச்சமாக இருந்த நிலையில் மீண்டும் அதையே நோக்கி தங்கம் விலை நகர்கிறது. அந்த வகையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.59,120-க்கு விற்பனையானது. இந்நிலையில், தை, மாசி மாதங்கள் தமிழகத்தில் திருமணம், புதுமனை புகுதல் உள்ளிட்ட வைபவங்களுக்கான சுபமுகூர்த்த நாட்கள் நிறைந்த மாதங்கள் என்பதால் ஒரு பவுன் தங்கம் ரூ.60,000 என்ற புதிய உச்சத்தைக் கூட எட்டலாம் என்று நகை வணிகர்கள் கணிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து