முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.500-க்கு கேஸ், 300 யூனிட் இலவச மின்சாரம்: டெல்லியில் காங். தேர்தல் வாக்குறுதி

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      இந்தியா
congress-office

புதுடெல்லி,  டெல்லியில் ஆட்சிக்கு வந்தால், சமையல் எரிவாயு ரூ.500-க்கும், 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் இலவச ரேஷன் கிட் வழங்கப்படும் என்று காங்ரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லிக்கான காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதங்களை தெரிவிக்கும் விதமாக பணவீக்கம் இல்லாத திட்டத்தினை கட்சி  நேற்று அறிமுகப்படுத்தியது. அதனை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிமுகம் செய்துவைத்தார். அப்போது டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர யாதவ் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய தெலங்கானா முதல்வர், “டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், கட்சி அதன் ஐந்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும்.” என்று தெரிவித்தார்.

கடந்த வாரத்தில், பெண் வாக்காளர்களை ஈர்க்கும் விதமாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. முன்னதாக, ஜன.8-ம் தேதி காங்கிரஸ் கட்சி‘ஜீவன் ரக்ஷா யோஜனா’என்ற திட்டத்தை அறிவித்தது. அதன்படி, ரூ.25 லட்சம் வரை சுகாதார காப்பீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அதேபோல், படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவும் வகையில், ஒரு ஆண்டுக்கு மாதம் தோறும் ரூ.8,500 வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

டெல்லியின் 70 தொகுதிகளுக்கு பிப்.5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பதிவான வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்படுகின்றன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து