முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் விண்கலம்

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      உலகம்
Vinkalam 2025-01-17

Source: provided

டெக்சாஸ் : விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் ஸ்டார்ஷிப் விண்கலம் வெடித்து சிதறியது. 

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது முன்மாதிரி ராக்கெட்டான ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் விண்கலங்களை அனுப்பி சோதனை செய்து வருகிறது. அவ்வகையில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட விண்கலத்துடன் ஸ்டார்ஷிப் ராக்கெட் நேற்று முன்தினம் இரவு விண்ணில் செலுத்தப்பட்டது.

முந்தைய சோதனை விண்கலத்தை போலவே, இதுவும் குறிப்பிட்ட ஒரு சுற்றுப்பாதையில் பறக்கவிருந்தது. பயிற்சிக்காக இந்த விண்கலத்தில் 10 டம்மி செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டிருந்தன. வெற்றிகரமாக புறப்பட்ட ராக்கெட்டில் இருந்து விண்கலம் உள்ள தொகுதி தனியாக பிரிந்ததும் பூஸ்டர் (சூப்பர் ஹெவி முதல் நிலை பூஸ்டர்) திட்டமிட்டபடி ஏவுதளத்திற்கு திரும்பியது.  

ஆனால், உயரே சென்ற ஸ்டார்ஷிப் விண்கலம், திடீரென தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. சிறிது நேரத்தில் விண்கலம் வெடித்து சிதறியது. இது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விண்கலம் வெடித்து சிதறி அதன் குப்பைகள் பூமியை நோக்கி விழும் காட்சியை விமானத்தில் இருந்தபடி சில பயணிகள் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து ஸ்பேஸ்எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "வெற்றி என்பது நிச்சயமற்றது, ஆனால் பொழுதுபோக்கு உறுதி" என்று குறிப்பிட்டு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எரிபொருள் கசிவினால், என்ஜின் பயர்வாலுக்கு மேலே உள்ள குழியில் அழுத்தம் உருவாகியிருக்கலாம் என்று முதற்கட்ட தரவுகள் தெரிவிப்பதாக எலான் மஸ்க் கூறி உள்ளார். காற்றோட்டத்தை அதிகரிப்பது மற்றும் கசிவுகளை இருமுறை சரிபார்ப்பதுடன், தீயை கட்டுப்படுத்தும் அம்சங்கள் அந்தப் பகுதியில் சேர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்டார்ஷிப் விண்கலம் வெடித்து சிதறியதை தொடர்ந்து விண்கல குப்பைகளால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, அந்த வழியாக சென்ற விமானங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து