முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்தர்களை தன்பால் கவர்ந்திழுக்கும் லண்டன் 'ராக்கி மவுண்டன்' வெங்கடேஸ்வரர் கோவில்

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      உலகம்
Kovil 2025-01-17

Source: provided

லண்டன் : உலகின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்களை தன்பால் கவர்ந்திழுத்து வருகிறார் இங்கிலாந்தில் அமைந்துள்ள 'ராக்கி மவுண்டன்'  ஸ்ரீ வெங்கடேஸ்வரர்.

இங்கிலாந்தின்  பர்மிங்காமில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ளது டிவிடேல்  பகுதியில்  'ஈஸ்டர்ன் காட்' எனப்படும் ஏழு மலைகள் சூழ்ந்த, 'ராக்கி மவுண்டன்' எனும் மிகப் பழமையான வனப்பகுதியில்,  1997-ல் பூமி பூஜை செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, ஏப்ரல் 2000-ல் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவில் உருவானது.

ஏழு கலசங்களுடன் கூடிய 4 அடுக்கு நுழைவு வாச லுடைய, கோவிலுக்குள்  4 அடி உயரத்தில் கருணையே வடிவாகக் காட்சி தருகிறார் வெங்கடேசப் பெருமாள். அங்கேயே ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாளின் உற்சவ மூர்த்திகள். எதிரே அவரது வாகனமான கருடாழ்வார் கை கூப்பி நிற்கிறார்.  வலதுபுறத்தில் தனிச் சன்னிதியில் தாயார், இடப்புறம் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.  தென்கிழக்கு மூலையில் சிறிய கோவிலில் சக்கரத்தாழ்வார் எழுந்தருளி உள்ளார்.  தனிக்கோவிலில் ஆனைமுகத்துக் கடவுளும், இடது புறத்தில் ஒரு தனிக்கோவிலில் முருகப்பெருமானும் அருள் புரிகின்றனர் . சிவபெருமான் கங்காதேசுவரர் என்ற திருநாமம் கொண்டு லிங்க வடிவில் காட்சி தருகிறார்.  

பசுமையான மலைகளின் பின்னணியில் குளுமையான சூழலில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்கு,  புரட்டாசி சனிக்கிழமைகளிலும், வார சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகிறார்கள். விநாயகருக்குரிய சதுர்த்தி தினங்களும், முருகனுக்கேற்ற கார்த்திகை, சஷ்டி விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. சிவ பெருமானுக்குரிய விழாக்களில் பிரதோஷம், மகா சிவராத்திரி நாட்கள் பிரசித்தமானவை. 

இந்த வளாகத்திலேயே கம்யூனிட்டி ஹால் என்ற தனிக்கட்டிடம் மிகப் பெரிய கூடத்துடன் இருப்பது ஆன்மிக விழாக்கள் நடத்தவும், மக்கள் பணிகளுக்கும் பயன்படுகிறது. குழந்தைகள் விளையாடும் கூடம், தியான கூடம் ஆகியவையும் உள்ளன. வெங்கடேசப் பெருமாள் கோவிலின் கீழ்த்தளத்தில் கோவில் அலுவலகம் இயங்குகிறது. அங்கே சிறிய கண்காட்சியும் உள்ளது. அனைத்து தெய்வங்களையும் உள்ளடக்கிய சிறுசிறு கோவில்களைக் கொண்ட இத்திருத்தலம் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் (பாலாஜி) கோவில் என்று அழைக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து