முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயம் காரணமாக ரஞ்சி கோப்பை தொடரில் இருந்து கோலி, கே.எல்.ராகுல் விலகல்..?

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      விளையாட்டு
Virat-Kohli 2023 08 11

Source: provided

மும்பை : காயம் காரணமாக  ரஞ்சி கோப்பை தொடரில் விராட் கோலி, கே.எல்.ராகுல் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூத்த வீரர்கள்....

இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றதுடன், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இவ்விரு தொடரிலும் மூத்த வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ரன் எடுக்க முடியாமல் திணறினர். எனவே மூத்த வீரர்கள் உள்பட அனைவரும் உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி போட்டியில் கட்டாயம் விளையாட வேண்டும். அதுதான் சர்வதேச போட்டிக்கு தயாராவதற்கு உதவிகரமாக இருக்கும் என்று தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் அறிவுறுத்தினார்.

22-ம் தேதி தொடக்கம்...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் அடுத்தகட்ட லீக் சுற்று ஆட்டங்கள் வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்திய முன்னணி வீரர்கள் பலர் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. விராட் கோலியின் பெயர் டெல்லி அணியின் உத்தேச பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் ரஞ்சி கோப்பையின் அடுத்த சுற்று ஆட்டங்களில் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் விளையாட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

காயம் காரணமாக...

விராட் கோலி கழுத்து வலி காரணமாகவும், கே.எல். ராகுல் முழங்கை காயத்தால் அவதிப்படுவதாலும் இருவரும் எதிர்வரும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. இருவரும் பி.சி.சி.ஐ.யிடம் காயம் குறித்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் பண்ட், ஜடேஜா மற்றும் சுப்மன் கில் போன்ற வீரர்கள் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட உள்ளனர். ரோகித் மும்பை அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டாலும் விளையாடுவது குறித்து எந்தவித தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து