முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ சிகிச்சை பெற ஜக்ஜித்சிங் ஒப்புதல்: உண்ணாவிரதத்தை முடித்து கொண்ட 121 விவசாயிகள்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      இந்தியா
Farmers 2025-01-19

Source: provided

சண்டிகர் : ஜக்ஜித் சிங் தல்லேவால் மருத்துவ சிகிச்சை பெற ஒப்புக்கொண்டதையடுத்து 121 விவசாயிகள் தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.

வேளாண் விளைபொருள்களுக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, டில்லி நோக்கி பேரணி செல்ல அனுமதி கேட்டு பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஷம்பு மற்றும் கனெளரி பகுதிகளில் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. சம்யுக்த கிஸான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால், கனெளரியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது போராட்டம் நேற்று 55வது நாளை எட்டியுள்ளது. இதனிடையே தல்லேவால் உடல்நிலை குறித்து விசாரிக்க சனிக்கிழமை வந்த வேளாண் அமைச்சக கூடுதல் செயலர் பிரியா ரஞ்சன் தலைமையிலான மத்திய அரசு அதிகாரிகள் குழு, பிற விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இச்சந்திப்பு சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது. இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரியா ரஞ்சன், ‘விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி தல்லேவாலின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தோம் .போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தை சண்டீகரில் பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறும். உண்ணாவிரதத்தை கைவிடுமாறும், மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்ளுமாறும் தல்லேவாலை வலியுறுத்துகிறோம். அதன்மூலம், அவரால் மத்திய அரசின் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும் என்றார். இதைத்தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற ஒப்புக்கொண்ட ஜக்ஜித் சிங் தல்லேவாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இப்போது மருத்துவ உதவி எடுத்துக்கொண்டாலும், அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னரே உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தல்லேவால் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தல்லேவால் மருத்துவ சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டதையடுத்து 121 விவசாயிகள் தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஞாயிற்றுக்கிழமை முடித்துக்கொண்டனர். துணை காவல் ஆய்வாளர் மந்தீப் சிங் சித்து மற்றும் பாட்டியாலா மூத்த காவல் கண்காணிப்பாளர் நானக் சிங் ஆகியோர் முன்னிலையில் பழச்சாறு குடித்து அவர்கள் உண்ணாவிரதத்தை முடித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து