முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை முதல் 2 நாட்களுக்கு சென்னையில் ட்ரோன்கள் பறக்கத்தடை

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2025      தமிழகம்
Drone 2023 06 12

Source: provided

சென்னை: குடியரசு நாளையொட்டி சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் (ஜன.25, 26 ஆகிய தேதிகளில்) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

குடியரசு நாளையொட்டி சென்னையில் ஜன.25, 26 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை மெரீனாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு நாள் விழா அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஜன. 26 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி, சென்னை ராஜ் பவன் முதல் மெரீனா கடற்கரை வரையிலும் அதேபோல முதல்வர் இல்லம் முதல் மெரீனா கடற்கரை வரையிலும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இப்பகுதிகளில் ஜன. 25, 26 ஆகிய நாள்களில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காமராஜா் சாலையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசு நாளையொட்டி அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்படஉள்ளது .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து