முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபீமா விமர்சனம்

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      சினிமா
Rajabhima-Review 2025-02-03

Source: provided

சிறு வயதில் அம்மாவை இழந்த நாயகன் ஆரவ் ஊருக்குள் வழிதவறி வந்த யானையை தானே வளர்க்கிறார். ஆரவின் யானையை முன்னறிவிப்பு இல்லாமல் யானை முகாமுக்கு வனத்துறை அழைத்துச் செல்கிறது. முகாமுக்கு சென்று பார்க்கும் ஆரவிடம் வேறு ஒரு யானையை அதிகாரிகள் காண்பிக்கிறார்கள். ஆனால், இது தன்னுடைய யானை இல்லை, என்பதில் உறுதியாக இருக்கும் ஆரவ், தனது யானையை தேட தொடங்குகிறார். அவரது யானை கிடைத்ததா?, யானையின் திடீர் மாயத்தின் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் கதை. நாயகனாக நடித்திருக்கும் ஆரவ், ஆக்‌ஷன், நடிப்பு இரண்டிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். நாயகியாக வரும் ஆஷிமா நர்வால், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார், நாசர், யாஷிகா ஆனந்த், யோகி பாபு, ஓவியா, சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட அனைவரும் திரைக்கதைக்கு ஏற்ப பயன் பட்டிருக்கிறார்கள். சைமன் கே.கிங் இசையும்  எஸ்.ஆர்.சதிஷ் குமாரின் ஒளிப்பதிவும் அருமை. எழுதி இயக்கியிருக்கும் நரேஷ் சம்பத், விலங்குகளின் பாசத்தையும் செல்ல பிராணிகளிடத்தில் மனிதன் காட்டும் அன்பையும் அழகாக காட்டியிருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு யானையை மையமாக கொண்ட கதைக்களத்தை தேர்வு செய்து அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்த முயற்சித்திருக்கிறார் இயக்குநர் நரேஷ் சம்பத். மொத்தத்தில், ராஜபீமாவை ஒரு முறை பார்க்கலாம்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து