முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேசத்தில் சரக்கு ரெயில்கள் மோதி விபத்து

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025      இந்தியா
Tairn 2023-05-25

Source: provided

லக்னோ : உத்தரபிரதேசத்தில் 2 சரக்கு ரெயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தின் காகா பகுதியில் உள்ள பாம்பிபூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது பின்னால் வந்த மற்றொரு சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரெயிலின் பாதுகாப்பு பெட்டியும், என்ஜினும் தடம் புரண்டன. இதனால் அப்பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சரக்கு ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 1 லோகோ பைலட்டு உள்பட 2 ரெயில்வே அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துக்கான காரணம் பற்றி ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிக்னல் கோளாறு காரணமாக முதல் சரக்கு ரெயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தபோது 2-வது சரக்கு ரெயில் அதன் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து