முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,800 உயர்வு

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.63,440-க்கு விற்பனையாகி புதிய வரலாறு படைத்துள்ளது.  தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது நடுத்தர மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,800 உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில், திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.680 குறைந்து ரூ.61,640-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனையானது. புதன்கிழமை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.7,905-க்கும், பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை (பிப்.6) கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,930-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.63,440-க்கு விற்பனையானது.  கடந்த மூன்று நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1800 உயர்ந்துள்ள நிலையில், தங்கம் விலை உயர்வு நடுத்தர மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி நேற்று முன்தின விலையில்(புதன்கிழமை) மாற்றமின்றி கிராம் ரூ.107-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,07,000-க்கு விற்பனையானது. 

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முக்கிய நடவடிக்கைகள், பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2025-26-க்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைப்பு குறித்த அறிவிப்பு இல்லாதது மற்றும் சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து