முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசி தமிழ் சங்கமம்: கோவை-பனாரஸ் இடையே சிறப்பு ரெயில்

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      தமிழகம்
Train-2023-05-01

சென்னை, காசி தமிழ் சங்கமத்தை முன்னிட்டு கோவை-பனாரஸ் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காசி தமிழ் சங்கமத்தை முன்னிட்டு கோவை-பனாரஸ் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி கோவை-பனாரஸ்( வண்டி எண்: 06187) சிறப்பு ரெயில் வருகிற 16-ந்தேதி கோவையில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட்டு 18-ந்தேதி காலை 7.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். கோவை-பனாரஸ் சிறப்பு ரெயில் திருப்பூருக்கு காலை 7.28 மணிக்கு வந்து 7.30 மணிக்கு புறப்படும்.

அதே போல் பனாரஸ்-கோவை(வண்டி எண்:06188) சிறப்பு ரெயில் பனாரசில் இருந்து 22-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு 24-ந்தேதி காலை 9.30 மணிக்கு கோவை வந்தடையும். பனாரஸ்-கோவை சிறப்பு ரெயில் திருப்பூருக்கு காலை 8.05 மணிக்கு வந்து 8.10 மணிக்கு புறப்படும்இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து