Idhayam Matrimony

நில முறைகேடு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கர்நாடக ஐகோர்ட்டு மறுப்பு

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2025      இந்தியா
Karnataka-high-court

Source: provided

பெங்களூரூ: சித்தராமையா மனைவி பார்வதி தொடர்பான நில முறைகேடு வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரிய மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

கர்நாடகத்தில் சித்தராமையா (வயது 76) தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) 14 வீட்டுமனைகளை ஒதுக்கி இருந்தது. இதில், முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.முடா வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அம்மாநில கவர்னரிடம் மனு அளித்தனர்.

இந்த விசாரணைக்குத் தடை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சித்தராமையா வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்த கர்நாடக ஐகோர்ட்டு, விசாரணையைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தது. இந்த வழக்கை லோக் அயுக்தா போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற ஆர்.டி.ஐ. ஆர்வலர் சினேகமாயி கிருஷ்ணா என்பவர் தாக்கல் செய்த ரிட் மனுவினை கர்நாடக ஐகோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. இதனிடையே, சமூக ஆர்வலரும், மனுதாரருமான கிருஷ்ணா, சி.பி.ஐ. க்கு மாற்ற மறுத்த கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாட இருப்பதாக தெரிவித்தார். இந்த தீர்ப்பினை வரவேற்பதாகவும், தீர்ப்பினை மதிப்பதாகவும் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து