முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் விசை படகுகளை இயக்க பசுமை தீர்ப்பாயம் தடை

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2025      தமிழகம்
Fairman 2023 06 13

Source: provided

சென்னை : ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் படகுகள் இயக்க தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சமீப காலங்களில் ஆமைகளின் இறப்பானது அதிக அளவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசாங்கம் ஆமைகளின் இனப்பெருக்க காலங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் விசைப் படகுகள் செல்ல தடை விதித்தது. இருப்பினும் இந்த உத்தரவானது இன்னும் அமல்படுத்தப்பட வில்லை என பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரிய வகை ஆமைகள் உயிரிழக்க வாய்ப்புகள் உள்ள நிலையில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை விசைப்படகுகள் இயக்க தடை விதித்த அரசாணையை இன்னும் அமல் படுத்தாதது ஏன் என தீர்ப்பாயம் கேள்வி எழுப்பி உள்ளது. அரசாணையை அமல்படுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று பசுமை தீர்ப்பாயம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து