முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வரிவிதிப்பு அச்சுறுத்தல்: 4-வது நாளாக சரிந்த பங்குச் சந்தை

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2025      இந்தியா
stock-market 2023 06 28

Source: provided

மும்பை : அமெரிக்க வரிவிதிப்பு அச்சுறுத்தல் மற்றும் தடையற்ற அந்நிய நிதி வெளியேற்றம் காரணமாக, நேற்றைய வணிகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் சரிவுடன் முடிந்தன.

இறக்குமதிகள் உள்ளிட்டவற்றின் மீது கட்டணங்களை விதிப்பதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உறுதிப்பாட்டைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் நேற்று எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். இதற்கிடையில், உலகளாவிய விநியோக சங்கிலிகளில் ஏற்படக்கூடிய இடையூறுகள் குறித்த கவலைகளை முதலீட்டாளர்களிடம் எழுப்பியது.

நேற்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.7 சதவிகிதம் சரிந்து 77,311.80 புள்ளிகளாகவும், நிப்டி 0.76 சதவீதம் சரிந்து 23,381.60 புள்ளிகளாகவும் நிலைபெற்றது. எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீது 25 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்ததை அடுத்து முதலீட்டாளர்களின் கவலை மேலும் தீவிரமடைந்தது.

அமெரிக்க வரிவிதிப்பு அச்சுறுத்தல்கள் குறித்த சந்தை உணர்வும் முதலீட்டாளர்களை வெகுவாக பாதித்தது. இதனால் தங்கம் போன்ற பாதுகாப்பான இடத்தில் முதலீடுகளை செய்ய தொடங்கியுள்ளனர்.

டாடா ஸ்டீல், பவர் கிரிட், என்டிபிசி, ஜொமாட்டோ, சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் இன்று சரிந்தும் பார்தி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, நெஸ்லே உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.

ஆசிய சந்தைகளில் நேற்று சியோல் மற்றும் டோக்கியோ சரிந்த நிலையில் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயர்ந்து முடிந்தது. அமெரிக்க சந்தைகள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சரிவுடன் முடிவடைந்தது. உலகளாவிய பிரெண்ட் கச்சா 0.56 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 75.08 அமெரிக்க டாலராக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து