முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் டைட்டன்ஸ் அணியை வாங்குகிறது டோரண்ட் குழுமம்

செவ்வாய்க்கிழமை, 11 பெப்ரவரி 2025      விளையாட்டு
Gujarat-Titans-team 2024-05

Source: provided

 அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியின் பெரும்பாலான பங்குகளை அகமதாபாத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் டோரண்ட் குழுமம் வாங்கவுள்ளது. இதற்கான அனுமதி கோரி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிக பங்குகளை வைத்துள்ள சி.வி.சி.  கேபிடல் நிறுவனம் கடிதம் வழங்கியுள்ளது.

புதிய அணிகள்...

ஐ.பி.எல்.    தொடரில் 2022ஆம் ஆண்டு இரண்டு புதிய அணிகளை பி.சி.சி.ஐ.  அறிமுகம் செய்தது. அப்போது, குஜராத் அணியை சி.வி.சி.  கேபிடலும், லக்னெள அணியை ஆர்.பி.எஸ்.ஜி.  குழுமமும் வாங்கின. அப்போது, குஜராத் டைட்டன்ஸ் அணியை வாங்க போட்டியிட்ட டோரண்ட் குழுமம், கேபிடல் நிறுவனத்தைவிட குறைவான தொகையை தெரிவித்ததால் ஏலத்தில் தோல்வி அடைந்தது.

பேச்சுவார்த்தை...

இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கேபிடல் நிறுவனத்திடம் இருந்து குஜராத் அணியை வாங்குவதற்கு டோரண்ட் குழுமம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. ஆனால், ஐ.பி.எல்.    அணியை வாங்கும் நிறுவனம் குறைந்தது 3 ஆண்டுகள் அணியின் பங்குகளை விற்க முடியாது என்பதால், குஜராத் அணியை வாங்கும் முயற்சி தடைபட்டிருந்தது.

டோரண்ட் குழுமம்...

நேற்று முன்தினத்துடன் குஜராத் அணியை கேபிடல் நிறுவனம் வாங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பங்குகளை விற்பதற்கு அனுமதி கோரி பி.சி.சி.ஐ. க்கு கேபிடல் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. 67 சதவிகித பங்குகளை வாங்கும் டோரண்ட் குழுமத்தின் நிர்வாகத்தின் கீழ் குஜராத் அணி வரவுள்ளது. இருப்பினும், 2025 ஐ.பி.எல். தொடரில் அணியில் எவ்வித மாற்றமும் டோரண்ட் குழுமம் செய்ய வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. கேப்டனாக கில்லும், பயிற்சியாளராக நெஹ்ராவும் குறைந்தபட்சம் இந்த சீசனில் தொடர்வார்கள் என்று கூறப்படுகிறது.

ஒரு முறை கோப்பை...

குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகமாகி மூன்று ஆண்டுகளில் ஹர்திக் பாண்டியா தலைமையில் ஒரு முறை கோப்பையும் ஒரு முறை இரண்டாம் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து