முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நட்சத்திர ஓட்டலுடன் ஒப்பந்தம்

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

இந்திய அணிக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாடுகளில் ஒன்று தங்களுக்கென பிரத்யேக சமையல் கலைஞர்களை உடன் அழைத்து வரக்கூடாது என்பதாகும். தற்போது உடற்தகுதிக்கு பலரும் முக்கியத்துவம் அளித்து வருவதால் தங்களுக்கு என தனி உணவு, அதை ஏற்பாடு செய்ய தனி சமையல் கலைஞர்கள் என சில வீரர்கள் வைத்திருந்தனர். ஆனால் தற்போது இந்திய வீரர்கள் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் உணவுகளைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தனியாக உனக்கென சமையல் ஆட்களை வைத்திருக்கக் கூடாது என்று பி.சி.சி.ஐ. உத்தரவிட்டது.

இந்நிலையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் விராட் கோலி தனது உடற்தகுதியை கருத்தில் கொண்டு அதற்கேற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதற்காக அதிரடி முடிவு ஒன்றினை எடுத்துள்ளார். அந்த வகையில் தனக்கென பிரத்தியேகமாக சமையல் கலைஞர்களை அழைத்து வராமல் துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனக்கு ஏற்றவாறு உணவுகளை சமைக்க சொல்லி அதனை இந்த தொடர் முழுவதும் டெலிவரி செய்யும் வகையில் ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவரது அந்த கோரிக்கையை ஏற்ற ஓட்டல் நிர்வாகமும் அவருக்கு உணவினை சரியான முறையில் டெலிவரி செய்து வருகிறது.

_____________________________________________________________________________________

விதர்பா 308 ரன்கள் குவிப்பு

ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டி ஒன்றில் மும்பைக்கு எதிராக முதல் நாளில் விதர்பா 5 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்துள்ளது.  90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. 32 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் லீக் மற்றும் காலிறுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் குஜராத், கேரளா, விதர்பா மற்றும் மும்பை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின.

இதில் நாக்பூரில் நடைபெற்று வரும் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் மும்பை - விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி ஆரம்பம் முதலே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன அதர்வா தைடே (4 ரன்கள்) விரைவில் ஆட்டமிழந்தாலும், பின்னர் களமிறங்கிய வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர். மும்பை தரப்பில் ஷாம்ஸ் முலானி மற்றும் ஷிவம் துபே தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர். நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

_____________________________________________________________________________________

 ஆப்கனுக்காக விளையாட விருப்பம்

ஐ.சி.சி.  சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை  (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தான் அணி வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர்  தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகும் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாட விரும்புவதாக அந்த அணியின் மூத்த வீரர் முகமது நபி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: என்னுடைய எதிர்காலம் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது ஆப்கானிஸ்தான் அணிக்காக நான் விளையாடும் கடைசி ஒருநாள் போட்டிகளாக இருக்காது என நினைக்கிறேன்.  சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்த பிறகும், சில ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். இது குறித்து மூத்த வீரர்களிடம் ஆலோசனை செய்துள்ளேன். நான் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது எனது உடல் தகுதியை பொருத்தே அமையும் என்றார். ஆப்கானிஸ்தான் அணியின் மூத்த வீரரான முகமது நபிக்கு 40 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

_____________________________________________________________________________________

அணியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என்று தெரியவில்லை..? - இந்திய வீரர் வருத்தம்

இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து ரகானே சில கருத்துகளை கூறியுள்ளார்.;

அணியிலிருந்து நீக்கம்: ரகானே விரக்தி

இந்திய அணியிலிருந்து தான் நீக்கப்பட்டது குறித்து ரகானே மிக வருத்தத்துடன் சில கருத்துகளை கூறியுள்ளார். அதில், "சில வருடங்களுக்கு முன்பு நான் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டேன். ஆனாலும் மீண்டும் எனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலக டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த போட்டியில் நான் சிறப்பாக செயல்பட்ட போதும் ஏன் திடீரென அணியில் இருந்து என்னை நீக்கினார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு மூத்த வீரராக எனக்கு இன்னும் ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்தேன்.

ஆனால் என்னை திடீரென புறக்கணித்தார்கள்.. இது குறித்து நான் யாரிடமும் எதுவும் கேட்கப் போவது கிடையாது. ஏனெனில் அப்படிப்பட்ட ஆளும் நான் கிடையாது. என்னுடைய சிறப்பான செயல்பாடு மூலம்தான் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முயற்சிப்பேன். எனக்குள் இன்னும் அந்த பழைய நெருப்பும், ஆர்வமும் மிஞ்சி இருக்கிறது. அந்த வகையில்தான் தற்போது ரஞ்சி தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறேன். மும்பை அணிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்திருக்கிறேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து