முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2025      விளையாட்டு
Manu-Bhaker-2024-07-30

Source: provided

இந்த சீசனுக்கான முதலாவது உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையும், 2-வது உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பெரு தலைநகர் லிமாவில் ஏப்ரல் 13-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையும் நடக்கிறது. இந்த இரு உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய துப்பாக்கி சுடுதல் அணியை, இந்திய தேசிய ரைபிள் சங்கம் அறிவித்தது.

மனு பாக்கர் தலைமையிலான அந்த அணியில் 35 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். அனிஷ் பன்வாலா, விஜய்வீர் சித்து, இஷா சிங், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், சிப்ட் கவுர் சம்ரா, ஸ்ரீயங்கா சடான்ஜி, அர்ஜூன் பபுதா, ஆனந்த் ஜீத் சிங் நருகா, ரைஜா தில்லான், தமிழகத்தை சேர்ந்த பிரித்விராஜ் தொண்டைமான் ஆகிய முன்னணி வீரர், வீராங்கனைகள் உள்பட 35 அணியில் இடம் பிடித்துள்ளனர். 

சோயப் அக்தர் பாராட்டு

இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் சர்மா, ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆன முதலே அதிரடியாக விளையாடி வரும் அவர், சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சதமடித்து அசத்தினார். இதனால் இந்திய டி20 அணியில் நிலையான தொடக்க ஆட்டக்காரர் இடத்தை இவர் பிடிப்பார் என்று முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில்  இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை காண துபாய் சென்றுள்ள அபிஷேக் சர்மாவை பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வீரர் சோயப் அக்தர் எதிர்பாரா விதமாக நேரில் சந்தித்துள்ளார். அந்த சந்திப்பில் அக்தர் பேசியது பின்வருமாறு:- "இந்த தலைமுறையில் நான் பிறக்காததற்கு மகிழ்ச்சியடைகிறேன். இந்த இளம் பையனை மக்கள் விரும்புவதற்கு காரணம் இருக்கிறது.  நான் உங்களுடைய ஆட்டத்தை பார்த்தேன். அது அற்புதமாக இருந்தது.  உங்களுடைய பலத்தை எப்போதும் விடாதீர்கள். அதே நேரத்தில், உங்களை விட சிறந்தவர்களிடம் நண்பராகுங்கள். இந்த பையனுக்கு சிறந்த வாழ்வு இருக்கிறது. அவருக்கு நான் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து