Idhayam Matrimony

ரூ. 37 கோடி பரிசுத்தொகை கொண்ட முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: ஆக.16 வரை முன்பதிவு

திங்கட்கிழமை, 28 ஜூலை 2025      தமிழகம்
Udayanidhi 2024-09-02

Source: provided

சென்னை : ரூ. 37 கோடி பரிசுத்தொகை கொண்ட முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள 16.8.2025 வரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டினை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக உருவாக்கி வருகின்றார்கள். 2025 ஆம் ஆண்டு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்   அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் வருகின்ற 22.8.2025 முதல் 12.9.2025 வரை நடத்தப்படவுள்ளன.

மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் சிறப்பு மதிப்பெண்கள் மற்றும் சலுகைகள் பெற இயலும்.

ரூ. 37 கோடி மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025 ஆம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு இணையதளம் மூலமாக பதிவுகள் நடைபெற்று வருகின்றன. முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான https://cmtrophy.sdat.in / https://sdat.tn.gov.in வாயிலாக தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள 17.7.2025 முதல் முன்பதிவு நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்திட கடைசி நாள் 16.8.2025 மாலை 6.00 மணி ஆகும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து