Idhayam Matrimony

தெருநாய்கள் பிரச்சினை மிகவும் ஆபத்தானது: சுப்ரீம் கோர்ட்

திங்கட்கிழமை, 28 ஜூலை 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, தெருநாய்கள் பிரச்சினை மிகவும் ஆபத்தானது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

நாய் கடியால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்பாக ஊடங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் நேற்று தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தியது. இந்த வழக்கு நீதிபதி பர்திவாலா, நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஒவ்வொரு நாளும், டெல்லியிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகி வருகின்றன, இது ரேபிஸ் நோய் பாதிப்புக்கு வழிவகுக்கிறது. குழந்தைகளும், முதியவர்களும் இந்த கொடூரமான நோய்க்கு இரையாகி வருகின்றனர். இந்த விவகாரம் மிகவும் அச்சுறுத்தக்கூடியது என்றும் மிகவும் ஆபத்தானது.  

இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு முன்பு, இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் செய்தி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த நடவடிக்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து