Idhayam Matrimony

திரைப்படங்களை அனுமதியின்றி இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை : மத்திய அமைச்சர் எல்.முருகன்

திங்கட்கிழமை, 28 ஜூலை 2025      இந்தியா
Murugan 2023 04 02

Source: provided

 புதுடெல்லி : திரைப்படங்களை அனுமதியின்றி பதிவு செய்து இணையதளங்களிலோ, இதர தளங்களிலோ வெளியிட்டால், குறைந்தபட்சம் 3 மாத சிறைத்தண்டனை மற்றும் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

புதிதாக வெளியாகும் திரைப்படங்கள், உடனுக்குடன் சில இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:-

திரைப்படங்களை அனுமதியின்றி பதிவு செய்து வெளியிடுவதை திரைப்பட சட்டத்தின் 6ஏஏ மற்றும் 6ஏபி பிரிவுகள் தடை செய்கின்றன. சினிமா திருட்டுக்கு எதிரான சட்டப்பிரிவுகளை வலுப்படுத்துவதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்பட சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

அதன்படி, திரைப்படங்களை அனுமதியின்றி பதிவு செய்து இணையதளங்களிலோ, இதர தளங்களிலோ வெளியிட்டால், குறைந்தபட்சம் 3 மாத சிறைத்தண்டனை மற்றும் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும். சிறைத்தண்டனையை 3 ஆண்டுகள் வரையும், அபராதத்தை தணிக்கை செய்யப்பட்ட மொத்த படத்தயாரிப்பு செலவில் 5 சதவீதம் வரையும் நீட்டிக்க முடியும்.

திரைப்பட சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட 7(1பி)(ஐஐ) பிரிவு, திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. சம்பந்தப்பட்ட சினிமாவுக்கு காப்பிரைட் வைத்திருப்பவர்கள் அல்லது அதிகாரபூர்வ நபர்களிடம் இருந்து புகார்களை பெறவும், உரிய உத்தரவு பிறப்பிக்கவும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கும், திரைப்பட தணிக்கை வாரியத்துக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து