முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொரீஷியஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      உலகம்
Modi-1 2025-03-11

போர்ட் லூயிஸ், 2 நாள்கள் அரசுமுறை பயணமாக மோரீஷஸ் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மொரீஷியஸ் தேசிய தினம் மாா்ச் 12-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளுமாறு அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம், பிரதமா் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து அந்நாட்டுக்குப் பிரதமா் மோடி சென்றுள்ளார்.  அந்நாட்டின் 57-ஆவது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காகவும் இருநாடுகளின் கூட்டுறவை மேலும் மேம்படுத்தவும், இருநாட்டு மக்களின் முன்னேற்றம் மற்றும் வளமைக்காக நட்புறவை வலுப்படுத்தவும், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்காகவும் மொரீஷியஸ் தலைவா்களைச் சந்திக்கப்பதற்காகவும் பிரதமர் மோடி மொரீஷியஸ் சென்றுள்ளார்.

உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு பிரதமர் மோடி, மொரீஷியஸ் சென்றடைந்த நிலையில், அந்நாட்டு பிரதமர் நவீன் ராம்கூலம் மாலை அணிவித்து வரவேற்றார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மொரீஷியஸ் துணைப் பிரதமர், நாடாளுமன்றத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் மோடியை வரவேற்க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மத தலைவர்கள் என 200 மேற்பட்டோர் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பளம் விரிந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மார்ச் 12-ம் தேதி சுதந்திரம் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் மோரீஷஸ் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு மோரீஷஸ் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து