முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடற்தகுதியுடன் இருக்க உள்ளூர் போட்டிகளில் ஆடுவது முக்கியம் : மனம் திறந்த ஷ்ரேயஸ் ஐயர்

புதன்கிழமை, 12 மார்ச் 2025      விளையாட்டு
Shreyas-Iyer 2024-05-27

Source: provided

துபாய் : உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடுவதற்கு உடற்தகுதி எவ்வளவு முக்கியம் என்பதையும் கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்துள்ள இந்திய நட்சத்திர வீரர் ஷ்ரேயஸ் ஐயர், பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட பின் வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலிடம் பிடித்தார்... 

பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அசத்தலாக விளையாடி மூன்றாவது முறையாக கோப்பையையும் வென்றது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷ்ரேயஸ் ஐயர் அதிக ரன்குவித்த இந்தியர்களில் முதலிடம் பிடித்தார். 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக நடுவரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயஸ் ஐயர் உள்ளூர் போட்டிகளில் விளையாடாததால், பி.சி.சி.ஐ.யின் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

ரூ.26.75 கோடிக்கு... 

அதன்பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் டி20, டெஸ்ட் அணிகளில் இருந்து நீக்கப்பட்டார். ஐபிஎல்லில் 351 ரன்களும், ரஞ்சியில் 480 ரன்களும், விஜய் ஹசாரே தொடரில் 325 ரன்களும், சையத் முஷ்டாக் அலி தொடரில் 345 ரன்களும் விளாசினார். துபையில் நடந்த மெகா ஏலத்தில் பஞ்சாப் அணி அவரை ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்து கேப்டனாகவும் நியமித்துள்ளது. நீண்டகாலமாகவே இந்திய அணிக்கு 4-வது வரிசையில் ஆடுவதற்கு வீரர்கள் குழப்பத்தில் ஷ்ரேயஸ் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டார்.

கஷ்டத்திற்கு பலன்... 

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் 4-வது வரிசையில் விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர், மொத்தமாக 243 ரன்கள் குவித்தார். இந்தியர்களில் அதிகபட்சமும் இவர்தான். இவர் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடி 79 ரன்கள் விளாசினார். போட்டி முடிந்ததும் செய்தியாளர்களிடம் ஷ்ரேயஸ் ஐயர் பேசுகையில், “கடந்த சில மாதங்களாகப் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது. எங்கு தவறு செய்கிறோம் என்பதை பார்த்து அதை சரிசெய்தால் அதற்கு சரியான பலன் கிடைக்கும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடியது மிகவும் திருப்தியாக இருந்தது.

கற்றுக்கொண்டேன்... 

2023 உலகக் கோப்பைக்குப் பிறகு பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் என்னுடைய வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டேன். நான் எங்கு தவறு செய்தேன் என்பதை கண்டு மீண்டும் உடற்பயிற்சியில் முழு கவனம் செலுத்தினேன். உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடுவதற்கு உடற்தகுதி எவ்வளவு முக்கியம் என்பதையும் கற்றுக்கொண்டேன். என்னை நினைத்து எனக்கே பெருமையாக இருக்கிறது. மோசமான சூழல்நிலைகளில் இருந்து வெளியேவர என்னை கையாண்ட விதத்தை நானே நம்பினேன்.

அங்கீகாரம் இல்லை...

ஐபிஎல்லில் கோப்பையை வென்ற போதும்கூட எனக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அங்கீகாரம் என்பது மரியாதையைப் பெறுவது மட்டுமல்லாமல் களத்தில் நான் எடுக்கும் முடிவுகளை பொறுத்துதான். சில நேரங்களில் அவற்றை யாரும் கவனிப்பதில்லை. இருப்பினும், நான் செய்த முயற்சிகள் மிகவும் திருப்திகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று முடித்தார் ஷ்ரேயஸ் ஐயர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து