முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பேடெக்ஸ் செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விடுவித்து இஸ்ரோ சாதனை

வியாழக்கிழமை, 13 மார்ச் 2025      இந்தியா
Isro-logo

புதுடெல்லி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்  தனது ஸ்பேடெக்ஸ்  பரிசோதனையின் ஒரு பகுதியாக இரண்டு செயற்கைக் கோள்களை விடுவிக்கும் சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.  

இந்தப் பரிசோதனை வெற்றிக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் தொகுப்புகளை இஸ்ரோ அதன் எக்ஸ் பக்கத்தில் விரிவாக வெளியிட்டுள்ளது. அவை, எஸ்.டி .எக்ஸ்.-2-ஐ பிரிப்பது, திட்டமிட்டபடி கேப்சர் லிவர் 3-ஐ விடுவிப்பது, எஸ்.டி .எக்ஸ்.-2-லிருந்து கேப்சர் லிவரின் தொடர்பைத் துண்டிப்பது, பிடிப்புகளை விடுவிக்கும் கட்டளைகளை இரண்டு செயற்கைக் கோள்களுக்கும் வழங்குவது உள்ளிட்ட செயல்முறைகள் உள்ளடங்கியது. இஸ்ரோவின் இந்த வெற்றியைப் பாராட்டி மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 ஸ்பேஸ் டாக்கிங் பரிசோதனை திட்டம், கடந்த 2024 டிசம்பர் 30-ம் தேதி சதீஸ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து தொடங்கியது. ‘சேஷர்’ மற்றும் ‘டார்கெட்’ என்று அறியப்படும், எஸ்.டி .எக்ஸ்.01 மற்றும் எஸ்.டி .எக்ஸ்.02 செயற்கை கோள்களை விடுவிக்கும் பணி ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து விண்வெளி டாக்கிங் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய நான்காவது நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், மற்ற ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் பரிசோதனைகள் மார்ச் 15-ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார். இஸ்ரோவின் கூற்றுப்படி, ஸ்பேடெக்ஸ் திட்டம் என்பது செலவு குறைந்த ஒரு திட்டப் பணியாகும். பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இரண்டு சிறிய செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி ஸ்பேஸ் டாக்கிங்கை நிறுவுவதே இதன் நோக்கம். ஒரு பொதுவான நோக்கத்தை அடைய பல ராக்கெட்களை விண்ணில் ஏவுவதற்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து