முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மின்சார ஆட்டோக்களை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

வியாழக்கிழமை, 13 மார்ச் 2025      தமிழகம்
DCM--1-2025-03-13

 சென்னை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 மின் ஆட்டோக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் "காலநிலை வீரர்கள்" திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 மின் ஆட்டோக்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான பசுமை உட்கட்டமைப்புகளை முழுமையாக செயல்படுத்திய பள்ளிகளுக்கு பசுமைப் பள்ளிகளுக்கான சான்றிதழ்களை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- தமிழ்நாடு துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின்  முகாம் அலுவலகத்தில்  மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 மின் ஆட்டோக்களை வழங்கி, கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்த மின் ஆட்டோக்களில் மகளிர் சுய உதவிக் குழுவினர் இயற்கை சிற்றுண்டிகளை விற்பனை செய்திடவும், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 

மேலும்,  தமிழ்நாடு புதுமைத் தொழில் முனைவோர் திட்டத்தின்  இணைய முகப்பை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கடலோர தமிழகத்திற்கான உயிர்க்கேடய வரைபடங்கள், பாரம்பரிய மீள்திறனுக்கான வேர்கள் - பழங்குடியினரும் காலநிலை மாற்றமும், நிலையான வாழ்விடத்திற்கான சிறந்த நடைமுறைகள் ஆகிய தலைப்பிலான 3 புத்தகங்களையும் வெளியிட்டார்.

 இந்நிகழ்வின் போது, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் ஆ.ர .ராகுல்நாத், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி சிங், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் முனைவர் எம்.ஜெயந்தி, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் உதவித்திட்ட இயக்குநர் விவேக்குமார், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் ஆர்.கண்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து