முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்நுட்ப உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு: கோவை பாரதியார் பல்கலை. முன்னாள் துணை வேந்தர் உள்பட 16 பேர் வழக்கு

வியாழக்கிழமை, 13 மார்ச் 2025      தமிழகம்
Cort 2023 04 17

Source: provided

கோவை: கோவை பாரதியார் பல்கலையில் தொழில்நுட்ப உபகரணங்களில் முறைகேடு நடந்ததாக முன்னாள் துணை வேந்தர் உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை பாரதியார் பல்கலை.யில் 2016-ல் 500 கணினிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் ஆகியவை ரூ.84.57 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், தனித்தனியாக ஒப்பந்தப்புள்ளி கோரி இவற்றைக் கொள்முதல் செய்ததால் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். 

தொடர்ந்து, பல்கலை. தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்த சிண்டிகேட் கூட்டத்ல் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி, பாரதியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் கணபதி, முன்னாள் பதிவாளர்கள் வனிதா, மோகன், சரவண செல்வன் மற்றும் ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், தற்போது பணியில் இருக்கும் பேராசிரியர்கள், நிதிப்பிரிவு அலுவலர்கள் என மொத்தம் 16 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து