முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொரிஷியஸ் சுற்றுப்பயணத்தை முடித்து தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி

வியாழக்கிழமை, 13 மார்ச் 2025      இந்தியா
Modi PM 2024-12-20

Source: provided

புதுடெல்லி: அரசுமுறைப் பயணமாக மொரிஷியஸ் நாட்டிற்கு சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக மொரிஷியசுக்கு சென்றார். மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் அழைப்பு விடுத்ததன் பேரில் பிரதமர் மோடி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்.

பிரதமர் மோடியின் வருகையை சிறப்பிக்கும் வகையில் அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் உரையாற்றினார். இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் அந்நாட்டு அதிபரையும் சந்தித்து பேசினார். இதற்கிடையே, மொரிஷியஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பிரதமர் மோடிக்கு தி கிரேட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்டு கீ ஆப் தி இந்தியன் ஓசன் என்ற மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார். அதன்பின், அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இந்நிலையில், மொரிஷியஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு போர்ட் லூயிஸ் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தார். அவரை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து