எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காரைக்குடி : காரைக்குடியில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள சேர்வாவூரணி பகுதியைச் சேர்ந்தவர் மனோ. பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே ஒரு வழக்கு தொடர்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.
காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் தினந்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட மனோ தனது நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
காரைக்குடி 100 அடி சாலையில் வந்தபோது காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரது மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவர்கள் மீது பாய்ந்தது. இதில் தப்பித்த அவர்கள் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் தலைதெறிக்க ஓடினர்.
ஆனாலும் விடாமல் துரத்திய அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு கட்டத்தில் மனோவை சுற்றி வளைத்தனர். வசமாக சிக்கிக்கொண்ட அவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தனர். இதில் மனோ சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்து துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் அவர்களை தடுக்க வந்த நண்பர்கள் 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்து படுகாயம் அடைந்தனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த துணிகர சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலையுண்ட மனோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
பா.ம.க. உட்கட்சி பிரச்சினை: 6 மாதங்களில் சுமுக தீர்வு; அன்புமணி உறுதி
31 Oct 2025சேலம் : பா.ம.க. உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு ஏற்படும் என்று அன்புமணி= கூறினார்.
-
வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
31 Oct 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
31 Oct 2025சென்னை : ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு ஏற்படுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
31 Oct 2025சென்னை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
கோவையில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
31 Oct 2025கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு.
-
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான 'ஆன்லைன்' முன்பதிவு இன்று தொடங்குகிறது
31 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டது.
-
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் : ராஜ்நாத் சிங் கையெழுத்து
31 Oct 2025டெல்லி : இந்தியா- அமெரிக்கா இடையே 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ராஜ்நாத் சிங் கையெழுத்திட்டார்.
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் - செங்கோட்டையன்
31 Oct 2025கமுதி : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
-
விரைவில் சபரிமலையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல மொழி அடங்கிய தகவல் தொடர்பு செயலி அறிமுகம்
31 Oct 2025கூடலூர் : சபரிமலையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல மொழி அடங்கிய தகவல் தொடர்பு செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சபரிமலையில் மகர திருவிளக்கு பூஜை: 2 மாதங்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
31 Oct 2025கேரளா : சபரிமலையில் மகர திருவிளக்கு பூஜையை முன்னிட்டு 2 மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
-
சுருளி அருவியில் குளிக்க அனுமதி
31 Oct 2025கூடலூர் ,: நீர்வரத்து சீரானதால் 13 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்: அமலாக்கத்துறையின் புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
31 Oct 2025திருச்சி : குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமலாக்கத்துறை புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
-
பாலஸ்தீனிய கைதிகள் 30 பேரின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்
31 Oct 2025காசா சிட்டி : 30 பாலஸ்தீனிய கைதிகளின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல்.
-
ஓ.பி.எஸ்., தினகரன், செங்கோட்டையன் இணைந்த விவகாரம்: நயினார் கருத்து
31 Oct 2025திருநெல்வேலி : ஓ.பி.எஸ்., தினகரன், செங்கோட்டையன் இணைந்திருப்பது குறிதது நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு
31 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
-
புதுச்சேரியில் பழைய மின் கட்டணமே தொடரும்: அமைச்சர் திட்டவட்டம்
31 Oct 2025புதுச்சேரி : புதுச்சேரியில் பழைய மின் கட்டணமே தொடரும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
-
நவம்பர் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை முதியோர் வீடுகளுக்கு ரேஷன் விநியோகம்
31 Oct 2025சென்னை : முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் விநியோகிக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
-
கட்டணமில்லா பேருந்து பயண அட்டை மூலம் டிச. 31-ம் தேதி வரை பயணிக்க போக்குவரத்து கழகம் அனுமதி
31 Oct 2025சென்னை : கட்டணமில்லா பேருந்து பயண அட்டை மூலம் டிசம்பர் 31-ம் தேதி வரை பயணிக்கலாம் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-11-2025.
01 Nov 2025 -
என்.டி.ஏ. தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் நிதிஷை பேச அனுமதிக்கவில்லை : காங்கிரஸ் குற்றச்சாட்டு
31 Oct 2025பாட்னா : பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் முதல்வர் நிதிஷ் குமாரை பேச அனுமதிக்கவில்லை என்றும், இது பிஹார் மற
-
சென்னை கடற்கரையில் 4 பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு
31 Oct 2025சென்னை : சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளது.
-
தர்மஸ்தலா மரண வழக்கு: எஸ்.ஐ.டி. விசாரணைக்கு இடைக்கால தடை
31 Oct 2025பெங்களூரு : தர்மஸ்தலா மர்ம மரண வழக்கில் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
உலக கோப்பை கிரிக்கெட்:இந்திய மகளிர் அணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
31 Oct 2025மும்பை : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்ற இந்திய மகளிர் அணியினருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
தி.மு.க.வின் அனைத்துக்கட்சி கூட்டம் மூலம் பா.ம.க.வுடன் கூட்டணிக்கு தூதா?
31 Oct 2025சென்னை : தி.மு.க.வின் அனைத்துக்கட்சி கூட்டம் மூலம் பா.ம.க.வுடன் கூட்டணிக்கு தூது விடப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்
31 Oct 2025மதுரை : உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடைபெற்றது.


