முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் ஒன்றிணைந்து செயல்பட முடிவு : கனிமொழி எம்.பி., பேட்டி

சனிக்கிழமை, 22 மார்ச் 2025      தமிழகம்
Kanimozhi 2023-10-13

Source: provided

 சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் 7 மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளதாக தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு முடிவுக்கு எதிராக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நேற்று (மார்ச் 22)  நடைபெற்றது.

இதில் கேரள முதல்வா் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி , கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், காணொலி வாயிலாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.  கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கக் கோரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி,  நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கு பிற மாநில தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக உறுதியளித்துள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சி இதில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. நியாயமான தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்துகொண்ட, மறுசீரமைப்பால் பாதிக்கப்படக்கூடிய தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநில பேரவைகளிலும் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள்தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதே இந்த கூட்டத்தின் நோக்கம். இன்றைக்கு வர இயலாத கட்சிகளும் அடுத்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து