எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நாக்பூர் : நாக்பூர் வன்முறையில் கைதான முக்கிய குற்றவாளி வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
அவுரங்கசீப் கல்லறை தொடர்பாக நாக்பூரில் வன்முறை வெடித்தது. மத நூல் எரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு குழுக்கள் மோதிக்கொண்டன, இதில் நாக்பூரில் 40 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இதனிடையே வன்முறை சம்பவம் தொடர்பாக பாஹிம் கான் என்பவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே வன்முறையில் காயமடைந்தவர்களில் ஒருவர் சனிக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வன்முறை சம்பவம் தொடர்பாக பேசிய முதல்வர் பட்னாவிஸ், வன்முறையால் நகரத்தின் 80 சதவீத பகுதிகள் பாதிக்கப்படவில்லை என்று கூறியதை அடுத்து நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது.
இந்த நிலையில், வன்முறை சம்பவம் தொடர்பாக கைதாகி சிறையில் உள்ள பாஹிம் கானின் வீட்டை இடிக்க மாநகராட்சி முடிவு செய்து அதனை செயல்படுத்தி உள்ளது. சஞ்சய் பாக் காலனியில் உள்ள பாஹிம் கானின் இரட்டை மாடி வீடு நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று காலை மாநகராட்சி சார்பில் வீட்டை இடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |