எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : இணையதளங்களுக்கு எதிரான நடவடிக்கையை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் தீவிரப்படுத்தி வரும் நிலையில் 357 விளையாட்டு இணைய தளங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், சட்டவிரோத ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களுடன் இணைக்கப்பட்ட 2,400 வங்கி கணக்குகளையும் அரசு முடக்கியுள்ளது.
வெளிநாடுகளை சேர்ந்த ஆன்லைன் விளையாட்டு இணையதளங்கள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில இணையதளங்கள் ஜிஎஸ்டியை பதிவு செய்யத் தவறியதன் மூலம், வரி செலுத்த வேண்டிய தொகைகளை மறைத்து, வரிக் கடமைகளைத் தவிர்த்து வருகின்றன. அத்தகைய இணையதளங்களுக்கு எதிரான நடவடிக்கையை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் தீவிரப்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் 357 வெளிநாட்டு ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் சட்டவிரோத ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களுடன் இணைக்கப்பட்ட 2,400 வங்கி கணக்குகளையும் அரசு முடக்கியுள்ளது. இதன் மூலம் ரூ.126 கோடி முடக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய தகவல்களை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


