முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநெல்வேலி டி.ஐ.ஜி. உள்பட 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : தமிழகத்தில் 10 ஐ.பி.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி டி.ஐ.ஜி. பா.மூர்த்தி, ராமநாதபுரம் டி.ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராமநாதபுரம் டி.ஐ.ஜி. அபிநவ் குமார், மதுரை டி.ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி டி.ஐ.ஜி. பா.மூர்த்தி, ராமநாதபுரம் டி.ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி ஆணையர் சந்தோஷ் ஹதிமானிக்கு திருநெல்வேலி டி.ஐ.ஜி.-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை இணை ஆணையர் ஆர்.சக்திவேல் உளவுத்துறை- பிரிவு -1 இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கிழக்கு போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையர் வி.பாஸ்கரன் வண்ணாரப்பேட்டை இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை நலப்பிரிவு இணை ஆணையர் மேகலினா இடென் சென்னை கிழக்கு போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் இணை ஆணையர் டி.என்.ஹரி கிரண் பிரசாத் காவல்துறை நலப்பிரிவு இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கமாண்டோ சிறப்புப் படை எஸ்.பி. வி.கார்த்திக், மயிலாப்பூர் இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு எஸ்.பி. ஜி.ஜவகர், சென்னை வடக்கு மண்டல சிபிசிஐடி எஸ்.பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் வடக்கு சரக சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் ஏ.சுஜாதா, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து