முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கூட்டணியால் மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் 123 ஆக அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2025      இந்தியா
Parliament-2024-11-27

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க, கூட்டணி அமைத்ததன் மூலம் பாராளுமன்ற மேல்சபையில் பா.ஜ.கவின் பலம் 123 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லி மேல்சபையின் மொத்த எண்ணிக்கை 245. அதில் 9 இடங்கள் காலியாக இருக்கின்றன. இதனால் தற்போதைய எண்ணிக்கை 236-ஆக உள்ளது. இதில் பெரும்பான்மை பெற 119 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. கூட்டணிகள் பலத்துடன் அந்த எண்ணிக்கையை பா.ஜ.க. கைவசம் வைத்துள்ளது. தற்போது பா.ஜ.க. அணியில் அ.தி.மு.க. இணைந்துள்ளதால் அந்த கட்சியில் மேல்சபையில் உறுப்பினர்களாக இருக்கும் தம்பித்துரை, சந்திரசேகரன், சி.வி.சண்முகம், தர்மர் ஆகிய 4 எம்.பி.க்கள் ஆதரவு பா.ஜ.கவுக்கு கிடைத்து உள்ளது. இதன் மூலம் பா.ஜ.கவின் பலம் 123 ஆக உயர்ந்து உள்ளது. பா.ம.க.வை சேர்ந்த அன்பு மாரியின் பதவிக்காலம் வருகிற ஜூலையில் முடிகிறது. மீண்டும் அவர் மேல்சபை எம்.பி.யாக வந்தால் பா.ஜ.க. பலம் 124 ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஆந்திரா, ஜம்மு-காஷ்மீரில் காலியாக இருக்கும் இடங்களுக்கான தேர்தல் முடியும் போது பா.ஜ.க. கூட்டணியின் பலம் 141 ஆக உயரலாம் என்று பா.ஜ.க. கணக்கு போட்டு உள்ளது. இதன் மூலம் மேல் சபையிலும் மசோதாக்களை நிறைவேற்ற போதுமான எண்ணிக்கையை பெற முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து