முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 4 ஆண்டுகளில் 37 அரசுக்கல்லூரிகள் திறப்பு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      தமிழகம்
kv-chezhiyan 2025-01-21

 சென்னை, தி.மு.க. ஆட்சியின் 4 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 37 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அதி.மு.க. உறுப்பினர் கே.செல்லூர் ராஜூ மதுரை விளாங்குடியில் இருபாலருக்கான கலைக் கல்லூரி தொடங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த உயர் கல்வித் துறை அமைச்சர்கோவி.செழியன், மதுரை மாவட்டத்தில் தற்போது 3 அரசு மற்றும் 21 அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. விளாங்குடி அருகிலேயே அரசுக் கல்லூரிகள் இருப்பதால் அந்த பகுதியில் புதிய கல்லூரி திறக்க தேவை எழவில்லை” என்றார்.

அப்போது, அதி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜூ, “விளாங்குடியில் அரசு கலைக் கல்லூரி திறக்கப்படும் என்று பேரவையில் ஏற்கனவே வாக்குறுதி தரப்பட்டுள்ளது” என்றார். அதற்கு அமைச்சர் கோவி.செழியன், “கடந்த அதி.மு.க. ஆட்சியில் 2011-16-ம் ஆண்டுகளில் 18, பின்பு 2016-21-ம் ஆண்டுகளில் 22 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 37 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  உறுப்பினர் கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த போது புதிய கல்லூரியை திறந்திருக்கலாம்” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து அதி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜூ, “அரசு நிதியுதவி கல்லூரிகளில் கட்டணம் கூடுதலாக இருக்கிறது. மேலும், பேரவையில் ஏற்கெனவே வாக்குறுதி அளிக்கப்பட்டதால் அமைச்சர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார். அதற்கு அமைச்சர் கோவி.செழியன், “மாணவர்கள் நலன் கருதி தேவை அறிந்து விளாங்குடியில் உரிய கருத்துரு பெற்று புதிய கலை, அறிவியல் கல்லூரி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிலளித்தார். இவ்வாறு அந்த விவாதம் நடைபெற்றது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து