முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம் : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      தமிழகம்
Thangam 2023 04 05

Source: provided

சென்னை : மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், தமிழ்நாடு சட்டப்பேரவையில்  உலகிற்கே முன்னோடியாக தொழில்நுட்பம், கலை, இலக்கியம், சிற்பங்கள், கொடை, வீரம், ஐந்து வகை நிலப்பரப்புகள் என பண்டைய தமிழர்களின் வாழ்வு சிறந்து விளங்குவதையும், அதற்கு புறச்சான்றுகளாக கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர் என பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் கிடைக்கப்பெற்ற தொல்பொருள்கள் மற்றும் கல்வெட்டுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தேன்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததிலிருந்து இன்று வரை மேற்கொள்ளப்பட்டுள்ள தொல்லியல் துறை முன்னெடுப்புகள், 18ற்கும் மேற்பட்ட அகழ்வாராய்ச்சிகள், புதிய அருங்காட்சியகங்கள், 5300 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு தொழில்நுட்ப கால முடிவுகள் எனப் பலவற்றையும் விவரித்துப் பேசினேன்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகம், தரங்கம்பாடி கோட்டை ஆகியவற்றில் நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலி,ஒளி காட்சி அமைக்கப்படும், தமிழ்நாட்டின் தொன்மையையும் பண்டைய தமிழ்நாட்டு அரசியல் சமூக பொருளாதார வரலாற்றைப் பறைசாற்றக் கூடிய கல்வெட்டுக்களை காலவாரியாகத் தொகுத்து கல்வெட்டு அருங்காட்சியகம் ஒன்று மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் அமைக்கப்படும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 12 நினைவுச் சின்னங்கள், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்படும்  என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து