முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த தொடரில் காணாமலும் போகலாம்: சூர்யவன்ஷி குறித்து சேவாக்

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      விளையாட்டு
Sehwag 2024-05-17

Source: provided

புதுடெல்லி : சூர்யவன்ஷியை அடுத்த ஐ.பி.எல் தொடரில் பார்க்க முடியாமலும் போகலாம்  என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

இளம் வீரர்...

நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருபவர் வைபவ் சூர்யவன்ஷி (வயது 14). ஐ.பி.எல். வரலாற்றில் இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்தார். லக்னோவுக்கு எதிரான அறிமுக ஆட்டத்தில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்தினார்.

பணிவு வேண்டும்...

இது தொடர்பாக இந்திய முன்னாள் வீரர் சேவாக்  கூறியதாவது, நன்றாக விளையாடினால் பாராட்டும், மோசமாக விளையாடினால் விமர்சனமும் வரும் என்பதை இளம் வீரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் எந்த நிலையிலும் பணிவாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஓரிரு போட்டிகளிலேயே புகழ் பெறும் வீரர்களை நான் பார்த்திருக்கிறேன். அதற்குப் பிறகு அவர்கள் வேறு எதையுமே செய்ய மாட்டார்கள்.

நட்சத்திர வீரர்...

ஏனென்றால், அவர்கள் நட்சத்திர வீரர்கள் ஆக மாறி இருப்பார்கள். வைபவ் சூர்யவன்ஷி ஐ.பி.எல் தொடரில் 20 வருடங்கள் விளையாட முயற்சி செய்ய வேண்டும். விராட் கோலியை எடுத்துக் கொண்டால் அவர் 19 வயதில் ஐ.பி.எல் தொடரில் விளையாட ஆரம்பித்தார். தற்போது அவர் 18-வது ஆண்டாக ஐ.பி.எல் தொடரில் விளையாடி வருகிறார்.

காணாமலும் போகலாம்...

விராட் கோலியை போல சூர்யவன்ஷி அதிக ஆண்டுகள் விளையாடுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை முயற்சி செய்ய வேண்டும். சூர்யவன்ஷி இந்த ஐ.பி.எல் தொடரில் மகிழ்ச்சியாக இருப்பார் ஏனென்றால் அவர் இப்பொழுது கோடீஸ்வரன். அவருக்கு ஒரு சிறந்த அறிமுகம் கிடைத்தது முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். ஆனால், அவரை அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் நாம் பார்க்க முடியாமலும் போகலாம். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து