முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் தமிழகம் முழுவதும் ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் : 9,000 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளதாக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      தமிழகம்
CM-1 2023-11-18

Source: provided

சென்னை : ஜூன் மாதம் முதல் நான்காம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகைக்கு விடுபட்டவர்களுக்கான பணிகள் தொடங்கும். தமிழகம் முழுவதும் 9,000 இடங்களில் இதற்கான பணிகள் நடைபெறவுள்ளது என்று சட்டப்பேரவைியல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தகுதியானவர்களுக்கு...

இதுகுறித்து, தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஏப்.25) முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உறுப்பினர் ஈஸ்வரன், தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையைப் பற்றி பேசினார். மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய அந்த திட்டத்தின் அடிப்படையிலே, தமிழகத்தில் 1 கோடியே 14 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

கோரிக்கைகள்...

அதேநேரம், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டு போனவர்கள் குறித்த செய்தியும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அது அரசின் கவனத்துக்கும் வந்திருக்கிறது. சட்டப்பேரவையில் அதுதொடர்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தின் அடிப்படையிலே, பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, உடனடியாக அந்த கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

4-ம் கட்டமாக... 

வருகிற, ஜூன் மாதம் முதல் நான்காம் கட்டமாக‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தின் அடிப்படையிலே, அந்த கோரிக்கைகளைக் கேட்கக்கூடிய பணிகளைத் தொடங்கவிருக்கிறோம். 9,000 இடங்களில் அந்தப் பணி நடைபெறவிருக்கிறது. அந்த சமயத்தில், கலைஞர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் விடுபட்டு போயிருக்கிறதோ, அவர்கள் முறையாக விண்ணப்பித்தால், நிச்சயமாக விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து