முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்தித்து பேச்சு

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      உலகம்
Trump-Zelensky 2024-11-16

Source: provided

வாடிகன் : போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம், உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி  பேசிக்கொண்டனர்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். கடந்த நாட்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட அவரின் உடலுக்கு நேற்று இறுதிச் சடங்கு நடத்தப்படுகிறது.

வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மனைவி மெலினா டிரம்புடன் அமரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டனர்.

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கிற்கு முன்பு அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சிறிது நேரம் சந்தித்தார் என்பதை வெள்ளை மாளிகை மற்றும் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் உறுதிப்படுத்தின. வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் ஸ்டீவன் சியுங், அவர்கள் நேற்று தனிப்பட்ட முறையில் சந்தித்து மிகவும் பயனுள்ள விவாதம் நடத்தினர் என்றும் மேலும் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார். உக்ரைன் - ரஷியா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் டொனால்டு டிரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே கருத்து வேறுபாடு மற்றும் வாக்குவாதம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து