எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருப்பதி : திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் நடைபாதையில் செல்லும் பக்தர்கள் மிகுந்த விழிப்புடன் கும்பலாக செல்ல தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாள் என்பதால் நேற்று முன்தினம்திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் நேர ஒதுக்கீட்டு சர்வ தரிசன டிக்கெட் பெறுவதற்காக ஸ்ரீவாரி மெட்டு மற்றும் அலிபிரி நடைபாதைகளில் குவிந்தனர். அதிக அளவு பக்தர்கள் குவிந்ததால் தரிசன டிக்கெட் வாங்க பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.
தற்போது திருப்பதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கைக்குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் மற்றும் முதியவர்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர். திருப்பதியில் பக்தர்கள் காத்திருக்கும் 31 அறைகளும் பக்தர்கள் நிரம்பி காணப்பட்டது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தற்போது திருப்பதி மலைக்கு வரும் வாகனங்கள் அலிபிரி சோதனை சாவடியில் ஆக்டோபஸ் படையினர் மற்றும் போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு சோதனை கருவிகளை கொண்டு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் கருடா வட்டம் வரை பக்தர்களின் வாகனங்கள் பல மணி நேரம் வரிசையில் காத்து நின்றன.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் அலிபிரி நடைபாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுத்தை ஒன்று அப்பகுதியில் நடமாடுவதை கண்டனர். இதையடுத்து சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டினர். நடைபாதையில் செல்லும் பக்தர்கள் மிகுந்த விழிப்புடன் கும்பலாக செல்ல தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025