முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை அணிக்காக 6,000 ரன்கள்: ரோகித் சர்மா புதிய சாதனை

வெள்ளிக்கிழமை, 2 மே 2025      விளையாட்டு
Rohit-Sharma 2023 08-07

Source: provided

ஜெய்பூர்  மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா 6,000 ரன்களை கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

2-வது இடத்துக்கு... 

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா 6,000 ரன்களை கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஜெய்பூரில் நடந்த போட்டியில் அவர் 36 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்தப் போட்டியில் ரோகித் சர்மா டிஆர்எஸ் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் பேட்டிங்கில் அசத்தினார். ஒரு அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதில் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

டி20-யில் ஒரு அணிக்காக அதிக ரன்கள்:

1) 8,871 - விராட் கோலி (ஆர்சிபி).

2) 6,024 - ரோகித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்).

3) 5,934 - ஜேம்ஸ் வின்ஸ் (ஹாம்ப்ஷயர்).

4) 5,528 - சுரேஷ் ரெய்னா (சிஎஸ்கே).

5) 5,269 - எம்.எஸ்.தோனி (சிஎஸ்கே).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து