முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் போர் பதற்றம் எதிரொலி: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

சனிக்கிழமை, 3 மே 2025      உலகம்
UN 2023-09-23

Source: provided

ஜெனீவா : இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றயம் வலியுறுத்தி உள்ளது. 

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் எல்லையில் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. இதற்கிடையே இரு நாடுகளும் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் வலியுறுத்தின.

இந்நிலையில் இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி உள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தானின் துணைப் பிரதமர் இஷாக் தார் ஆகியோருடன் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு உயர் பிரதிநிதி காஜா கல்லாஸ் தனித்தனியாக தொலைபேசியில் பேசினார். 

இதுதொடர்பாக காஜா கல்லாஸ் தனது எக்ஸ் பதிவில், "இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் கவலையளிக்கின்றன. நிலைமையைத் தணிக்க இரு தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். பதற்றம் அதிகரிப்பு யாருக்கும் உதவாது. இதை தெரிவிக்க ஜெய்சங்கர் மற்றும் இஷாக் தார் ஆகியோருடன் பேசினேன்" என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில், "ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு உயர் பிரதிநிதி காஜா கல்லாசுடன் பேசினேன். அப்போது பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதித்தேன். அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாகக் கண்டித்ததை வரவேற்கிறோம்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் ஆகிய நாடுகளின் தூதா்களை சந்தித்தாா். அப்போது மோதல் ஏற்படுவதற்கான பதற்றத்தைத் தவிா்க்க இந்தியாவுக்கு அறிவுறுத்துங்கள் என அவர் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து