முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிரட்டல், அச்சுறுத்தல்களை நாம் அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சனிக்கிழமை, 3 மே 2025      தமிழகம்
Stalin 2022 12 29

சென்னை, அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், மிரட்டல்கள் மூலம் அசிங்கப்படுத்த நினைப்பர். அவர்களின் அரட்டல், மிரட்டல், உருட்டல்களுக்கான உண்மையான காரணம் மக்களுக்குத் தெரியும். எனவே, இந்த அச்சுறுத்தலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் என்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பொதுக்குழு கூட்டம்... 

சென்னை தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது. தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தி.மு.க. பொதுக்குழு கூட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

தலைமை முடிவு... 

மேலும் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்கள் யார் என்பதை தலைமை முடிவு செய்யும். வெற்றி பெறுபவர்களே வேட்பாளராக நிறுத்தப்படுவர். தகுதியானவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெற உழைக்க வேண்டியது உங்கள்(மாவட்டச் செயலாளர்கள்) கடமை. தடங்கல் என்பது எப்போதும் இருக்கும். அதனை உழைப்பால் வெல்லுங்கள்.

வார்டுக்கும் செல்ல... 

அமைச்சர்கள் சென்னையில் இருப்பதைவிட பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று பணியாற்ற வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் ஒவ்வொரு வார்டுக்கும் செல்ல வேண்டும். நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம்தான். இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம்தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம். இருக்க வேண்டும்.

பயப்படுகிறார்.... 

அ.தி.மு.க.வை அடக்கிவிட்டது பா.ஜ.க. தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற பா.ஜ.க. அனைத்துவிதமான அச்சுறுத்தலையும் செய்து அ.தி.மு.க.வை அடக்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொந்தக் கட்சியில் அவர் தலைமைக்கே சிக்கல் வந்துவிடும் என பயப்படுகிறார். அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், மிரட்டல்கள் மூலம் அசிங்கப்படுத்த நினைப்பர். அவர்களின் அரட்டல், மிரட்டல், உருட்டல்களுக்கான உண்மையான காரணம் மக்களுக்குத் தெரியும். எனவே, இந்த அச்சுறுத்தலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து