முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடுவர்களுடன் வாக்குவாதம் ஏன்? ஷுப்மன் கில் விளக்கம்

சனிக்கிழமை, 3 மே 2025      விளையாட்டு
Subman-Gill 2023 07 31

Source: provided

அகமதாபாத் : சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் நடுவருடன் ஷுப்மன் கில் வாக்குவாதம் செய்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

வாக்குவாதம்...

அகமதாபாத் மைதானத்தில் நடந்த (மே.2) போட்டியில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 224/6 ரன்கள் எடுக்க, ஹைதராபாத் 20 ஓவா்களில் இழந்து 186/6 ரன்களே சோ்த்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் பிளே ஆப் பந்தயத்தில் நிலைக்க, ஹைதராபாத் அந்த வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்தப் போட்டியில் ஷுப்மன் கில் நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

அதிருப்தி...

முதலில் குஜ்ராத் பேட்டிங்கின்போது ஷுப்மன் கில் ரன் அவுட் என 3-ஆம் நடுவர் கூறியது சர்ச்சையானது. பின்னர், பந்துவீச்சில் 13.4ஆவது ஓவரில் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்துக்கு எல்பிடபில்யூ கொடுக்கப்படவில்லை என குஜராத் சார்பில் ரிவிவ் எடுக்கப்பட்டது. இம்பாக்ட் அம்பயர்ஸ் காலில் இருந்ததால் நாட் அவுட் எனக் கொடுக்கப்பட்டது. இதனால் குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் களத்தில் இருந்த நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரே நாளில் இரண்டுமுறை இப்படியானதுக்கு ஷுப்மன் கில் மீது பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.

உணர்ச்சி மிகுதியால்... 

இது குறித்து போட்டிக்குப் பின்னர் ஷுப்மன் கில், “எனக்கும் நடுவர்களும் சில உரையாடல்கள் இருந்தன. சில நேரங்களில் நீங்கள் 110 சதவிகித உழைப்பினைக் கொடுக்கும்போது உணர்ச்சிகள் மிகுதியால் இப்படி நடக்கும்” என்றார். புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி 2-ஆம் இடத்தில் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி தற்போதைக்கு முதலிடத்தில் நீடிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து