முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைமலை நகரில் இன்று நடைபெறவுள்ள வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் இ.பி.எஸ். பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 மே 2025      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு கொளத்தூர் த.ரவி தலைமையில் வணிகர் பாதுகாப்பு மாநாடாக மறைமலை நகரில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் படப்பை கரசங்சாலில் இன்று வணிகர் தின மாநாடு நடைபெறுகிறது. பேரவை தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர். தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் திருவண்ணாமலையில் இன்று வணிகர் தின விழா நடத்தப்படுகிறது. மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் அ.முத்துக்குமார் தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில் மு.அருண்குமார் மாநாட்டு எழுச்சி உரையாற்றுகிறார்.

தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில் நிறுவனத் தலைவர் சந்திரன் ஜெயபால், சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை அரங்கத்தில் வணிகர் தினம் நடத்துகிறார். இதில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் சிறப்புரை ஆற்றுகின்றனர். இதில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் த.வெள்ளையனின் மகன் டைமண்ட் ராஜா நடத்தும் மாநாடு சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே ஜெயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிலும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பேசுகின்றனர். 6 இடங்களில் வணிகர்கள் மாநாடு நடத்துவதால் இன்று கடைகள் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளித்து மாநாட்டில் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து