முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கில் எக்ஸ் தளத்திற்கான தடை நீக்கம்

புதன்கிழமை, 7 மே 2025      உலகம்
Internet 2023 06 30

Source: provided

லாகூர் : போர் பதற்றம் காரணமாக எக்ஸ் தளம் தடையை நீக்கியது பாகிஸ்தான்.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்றிருந்த 26 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது.

இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நேற்றிரவு அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.பாகிஸ்தானில் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த தேர்தலின்போது, எக்ஸ் சமூக தளத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்து இருந்தது. தேசிய பாதுகாப்பு விசயங்களை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என அப்போது தெரிவிக்கப்பட்டது.

இதனால், அந்நாட்டின் பொதுமக்கள் எக்ஸ் தளத்தின் பயன்பாடுகளை பெற முடியாமல் இருந்தது. எனினும், வி.பி.என். உதவியுடன் அவற்றை மக்கள் பயன்படுத்த கூடிய சூழல் இருந்தது. இந்நிலையில், ஓராண்டுக்கும் மேலாக விதிக்கப்பட்டு இருந்த தடையை பாகிஸ்தான் அரசு நேற்று நீக்கியுள்ளது. இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்த நிலையில், எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் நீக்கியுள்ளது. போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் பாகிஸ்தான் மக்கள் தகவல்களை பகிர வசதியாக எக்ஸ் தளம் மீது விதித்த தடையை அந்நாட்டு அரசு நீக்கியிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து