முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை 27ம் தேதி தொடங்குகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சனிக்கிழமை, 10 மே 2025      இந்தியா
India-Meteorological 2022

புதுடெல்லி, கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட (ஜூன் 1) நான்கு நாட்களுக்கு முன்னதாக மே 27ம் தேதியில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்தியாவின் முதன்மையான பருவமழை வழக்கமாக ஜூன் 1-ம் தேதி கேரளாவை வந்தடையும்.  இந்திய வானிலை ஆய்வு மையம், கடந்த 2023-ம் ஆண்டில் பருவமழை சராசரியாக, 96 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. என்றாலும் உண்மையில் அந்த ஆண்டு சராசரி அளவை விட குறைவாக 94 % மழையே பதிவாகியிருந்தது. எல் நினோவினால் அந்த ஆண்டு பருவமழை நீண்டகால சராசரி அளவான 868.6 மி.மீ. அளவை விட குறைவாக 820 மி.மீ. மட்டுமே பதிவாகியிருந்தது. 2023-ம் ஆண்டுக்கு முன்பாக தொடர்ந்து நான்கு ஆண்டுகள் இந்தியா சரசாரி மற்றும் சராசரிக்கும் கூடுதலான மழையை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு (2024) நீண்ட கால சராசரியை விட கூடுதலாக 108 சதவீதம் மழை பதிவாகி இருந்தது. வானிலை ஆய்வு மையத்தின் எதிர்பார்ப்புப்படி, வரும் மே 27-ம் தேதி பருவமழை தொடங்கினால், கடந்த 2009-ம் ஆண்டு மே 23-ம் தேதி பருமழை தொடங்கியதற்கு பின்பு, இந்தியாவின் முக்கியமான நிலப்பரப்பில், முன்கூட்டியே பருவமழை தொடங்குவது இதுவாகத்தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து