முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் மோடி திடீர் விசிட் : வீரர்களுடன் கலந்துரையாடி பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 13 மே 2025      இந்தியா
Modi 2024-12-02

Source: provided

புதுடெல்லி : பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் துணிச்சலை பாராட்டினார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமாக இருந்த பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு துணை போனவர்களையும் எங்கிருந்தாலும் இந்தியா வேட்டையாடும் என்று பீகாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேச உரையாற்றினார். இதையடுத்து, கடந்த 7ம் தேதி இந்திய விமானப்படை 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இவற்றில் 5 முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், 4 முகாம்கள் பாகிஸ்தானிலும் இருந்தவை. இந்த தாக்குதலில், பயங்கரவாத முகாம்களின் கட்டிடங்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலில், குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று ராணுவம் தெரிவித்தது.

இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே 4 நாட்கள் நடந்த ராணுவ மோதல் கடந்த 10-ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த மோதலில், இந்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 5 பேர் வீர மரணமடைந்ததாகவும், பாகிஸ்தான் தரப்பில் 40-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்தது.

நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானின் அணு ஆயுதங்களுக்கு இந்தியா அஞ்சாது என்றும், பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும், ராணுவ மோதல் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, படைகள் களத்தில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறினார்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப் படை தளத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வீரர்கள் முன்பு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, 'ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியாவின் சுயமரியாதை உலக அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மிகச்சிறந்த உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. எஸ் 400 நமக்கு மிகப்பெரிய வலிமையைக் கொடுத்துள்ளது. நமது அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களின் முன்பு பாகிஸ்தானால் போட்டியிட முடியவில்லை. பாகிஸ்தானின் இதயத்தை நாம் எப்போது துளைத்தோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை.

பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு எடுத்தால், அதற்கான பதிலடி மிகவும் கடுமையானதாக இருக்கும். நாம் கொடுக்கும் பதிலடி அவர்களுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும். விமானப் படைக்கும் ராணுவப் படைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு சிறப்பானதாக இருந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஆபரேஷன் சிந்தூரில், ஆயுதங்களை வீரர்கள் மிகச்சிறப்பாக கையாண்டனர். முப்படைகளும் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளீர்கள்.

பாகிஸ்தானுக்கு நமது படைகளின் வலிமை என்னவென்று காட்டப்பட்டுள்ளது. இந்தியர்களையும் இந்திய எல்லையையும் தொட நினைப்பவர்களுக்கு ஒரே முடிவுதான், அது அழிவு மட்டும்தான். பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்துவந்த பாகிஸ்தானுக்கு நமது ராணுவப் படையும், விமானப் படையும், கடற்படையும் தகுந்த பாடத்தை புகட்டியுள்ளன. பயங்கரவாததை ஒழிப்பதே இந்தியாவின் லட்சுமண ரேகை என்பது தெள்ளத்தெளிவாகியுள்ளது. இந்தியாவின் மீது மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலடி மிகக் கடுமையானதாக இருக்கும்.

மூன்று விஷயங்களை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒன்று, இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், எங்கள் வழியில் நாங்கள் பதிலடி கொடுப்போம். இரண்டாவது, அணு ஆயுத அச்சுறுத்தலை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. மூன்றாவது, பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் அரசாங்கத்தையும், பயங்கரவாதத்துக்கு மூளையாகச் செயல்படுபவர்களையும் நாங்கள் வேறுபடுத்திப் பார்க்கவில்லை' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து