முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா..? - முகமது ஷமி மறுப்பு

புதன்கிழமை, 14 மே 2025      விளையாட்டு
Mohammed-Shami 2023-11-03

Source: provided

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக வெளியான தகவலுக்கு முகமது ஷமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ரோகித் - கோலி...

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கோலியின் ஓய்வு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே ரோகித், கோலியை தொடர்ந்து முகமது ஷமியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்று தகவல்கள் வெளியாகின.

முகமது ஷமி....

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக வெளியான செய்திகளை முகமது ஷமி மறுத்துள்ளார். தான் ஓய்வு பெறுவதாக வெளியான கட்டுரையின் ஸ்கிரீன் ஷாட்டை முகமது ஷமி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டார். அந்த ஸ்டோரியில், "ரொம்ப நல்லா இருக்கு மஹாராஜ். உங்க வேலை நாட்களையும் எண்ணிப் பாருங்க, இன்னும் எத்தனை நாளுக்கு உங்கள் வேலை இருக்கும். இது போன்ற கதைகளால் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை பாழாக்கிவிட்டீர்கள்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

உறுதிப்படுத்தி...

ஜூன் 20-ந்தேதி இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாட முகமது ஷமி தயாராக உள்ளார் என்பதை அவர் இதன்மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து