முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி: மாற்று வீரர் அறிவிப்பு

புதன்கிழமை, 14 மே 2025      விளையாட்டு
Delhi-Kabeital 2025-03-17

Source: provided

18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூருவில் மோதுகின்றன. அடுத்த மாதம் 3-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி அணியின் இடம்பெற்றிருந்த ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார். மீதமுள்ள ஐபிஎல் 2025 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதிலாக வங்க தேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார். ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஆறு போட்டிகளில் விளையாடி, 9.17 என்ற மோசமான சராசரியில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

_____________________________________________________________________________________________

கருண் நாயருக்கு கும்ப்ளே ஆதரவு

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கோலியின் ஓய்வு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20-ந்தேதி இந்த டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் 4 ஆம் இடத்தில் யார் களமிறங்குவார் என்று கேள்வி எழுந்துள்ளது. விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் கே.எல்.ராகுல் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விராட் கோலிக்கு மாற்று வீரராக கருண் நாயரை விளையாட வைக்கலாம் என்று முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளே ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "முதல் தர கிரிக்கெட்டில் ரன்களை குவித்திருக்கும் கருண் நாயர், இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற தகுதியானவர். அவரால் விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்" என்று தெரிவித்தார். அண்மையில் நடந்து முடிந்த சையத் முஸ்தாக் அலி டிராபி தொடரில் கருண் நாயர் தான் அதிக ரன்கள் குவித்தார்.இதனை தொடர்ந்து நடைபெற்ற ரஞ்சி டிராபியில் 54 சராசரியுடன் 863 ரன்கள் குவித்தார். இதில் 4 சதம், 2 அரைசதம் அடங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து